மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், வெற்றிமாறன் இயக்கத்தில் "அசுரன்" படத்தில் நடித்தார். பச்சையம்மாள் கேரக்டரில் இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வந்திருக்காது என ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு நடிப்பில் வெளுத்துவாங்கினார். 

தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் மஞ்சு வாரியார். மலையாளத்தில் "சதுர்முகம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ரஞ்சித் கமலா சங்கர் - ஷாலி வி இயக்குகின்றனர். ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் சண்டை காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டன. அதில் மஞ்சு வாரியருக்கு பதிலாக டூப் நடிகரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்காத மஞ்சு வாரியர்,  நான் தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடித்துள்ளார். 

முதல் முறையாக ரோப் உதவியுடன் சண்டை காட்சியில் நடித்த மஞ்சு வாரியர், எசகுபிசகாக விழுந்துள்ளார். இதனால் கால், இடுப்பு பகுதிகளில்  காயம் அடைந்த மஞ்சு வாரியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்கள் பெட் ரெஸ்ட் எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.