‘யூடியூபில் என் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை நம்பி ஏமாறவேண்டாம். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்து நான் சொன்னதாக வந்த கணிப்புகள் அத்தனையும் மோசடியானவை’என்கிறார் சர்ச்சைக்குரிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்.

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்ட அவர்,...நான் இதுவரை எப்போதுமே பிக்பாஸ் பற்றி கணித்தது கிடையாது .மேலும் பிக்பாஸில் யார் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நபர்களின் ஜாதகமும் என்னிடம் கிடையாது,மேலும் பிக்பாஸ் பார்த்ததும் கிடையாது.நான் எப்படி கணிக்க முடியும் ????

யூடியூபில் லாஸ்லியா என்கின்ற பெண் வெற்றிபெறுவார் நான் கூறினேன் என்று வந்துள்ளது என்று ஒருவர் கூறினார்.இப்பொழுது தர்ஷன் என்று யாரோ ஒருவர் தான் வெற்றி பெறுவார் என நான் கடித்ததாக கணித்த தாக வெளியிடுகிறார், பிறகு விசாரித்ததில் தான் தெரிகிறது.YouTube ( யூட்யூபில் ) 20 நிமிட காணொளிகளை ஒரு அம்பது ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்றால் அதற்கு குறிப்பிட்ட தொகை வரும் ,அந்த தொகைக்காக ஏதேனும் அன்றைய காலத்தில் இருக்கக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து போடுகிறார்கள்

சரி இருந்துவிட்டுப் போகட்டும் என்றால் அதில் ஏன் பெயரை பயன்படுத்துகிறார்கள் ??நீங்கள் என் பெயரை பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் யூடியூப் நடத்தும் நண்பர்களே,ஒரு அன்பான வேண்டுகோள் நான் எனது முகநூல் தவிர வேறு எந்த யூடியூப் சேனலுக்கு இனிவரும் காலத்தில் என் கணிப்புகளை வெளியிட மாட்டேன்.அதேபோல சென்ற முறையை வேலூர் தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று பாலிமர் தொலைக்காட்சி லோகோ உடன் எனது போட்டோவுடன் ஒரு போலி போட்டோஷாப் வந்தது போல. இது போன்ற எழுத்து ரீதியாக எதையும் நீங்கள் நம்ப வேண்டாம் ,நான் என் முகநூலில் வழக்கம்போல காணொளி வாயிலாக வெளியிட்டால் மட்டுமே அதை நம்புங்கள் அதிலும் நான் இருக்கிறேனா என்று பாருங்கள் ,

ஒரு சிலர் வேண்டுமென்று செய்கிறார்கள் இது போன்ற ஒரு சிலர் ஒரு பரபரப்பான செய்தியை ஏற்படுத்தி ஒரு ட்ரெண்டிங் மூலமாக மக்களை படிக்கவைத்து அதன் மூலமாக விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க இப்படி செய்கிறார்கள் ,இதை நீங்கள் புறக்கணியுங்கள் மேலும் அதில் போலி என்று கமெண்ட் செய்யுங்கள் அப்போது அவர்கள் மீண்டும் செய்ய மாட்டார்கள் நன்றி.

யூடியூப் மற்றும் வெப் பேஜ் நடத்தக்கூடிய நண்பர்களின் கவனத்திற்கு இன்னும் சில வாரங்கள் கழித்து பல கணிப்புகளை வழக்கம்போல வெளியிடுவேன் நீங்கள் தாராளமாக எடுத்து உங்களது வெப் பேஜில் வெளியிடலாம் எனக்கு அதில் எந்த கருத்தும் இல்லை. ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நான் சொல்லாத விஷயத்தை கனிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் என் பெயரைப் பயன்படுத்தினால் உங்களுடைய யூடியூப் சேனலுக்கும் அவப்பெயர் ஏற்படும் மீண்டும் உண்மையை வெளியிட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தயவுசெய்து இதுபோன்ற மீண்டும் செய்ய வேண்டாம்.இரண்டொரு மாதங்கள் கழித்து வழக்கம் போல தொடர்ந்து கணிப்புகளை வெளியிடுகிறேன் எனது கணிப்பை தாராளமாக நான் எழுதியதை அப்படியே பயன்படுத்தவும் நன்றி...என்று எழுதியிருக்கிறார்.