நான் எழுதி வைத்த (265 பக்க ஸ்க்ரிப்ட்டை) தன் கதையை அட்லி திருடியது எப்படி தனக்கு தெரிய வந்தது என்று இயக்குநர் செல்வா விளக்கமளித்திருக்கிறார்.

மௌன ராகம் தான் ராஜா ராணி, சத்ரியன் தான் தெறி, மெர்சல் படம் கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருந்தார் அதாவது அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம், பேரரசு ஆகிய படங்களிலிருந்து காந்திக்கு காட்சியை அப்படியே காப்பியடித்து எடுத்திருந்தார்.  இப்படி பழைய படங்களின் கதையையும் காட்சியையும் அப்படியே சுட்டு ரீல், ரீலாக ரீல் விட்ட அட்லீ இப்போ விஜய்யோடு இணைந்திருக்கும் அடுத்த படத்தை ஒரு குறும்பட இயக்குனரின் கதையை திருடியது அம்பலமாகியிருக்கிறது.

விஜய்யை வைத்து அட்லி இயக்கி வரும் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி இயக்குநர் செல்வா கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இயக்குனர் செல்வா ஆங்கில நாளிதழில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதில்; எனக்கு அட்லியை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இருவருக்கும் பொதுவான ஆட்கள் உள்ளனர். அட்லி பட கதை என் கதையை போன்றே உள்ளது என்று எனக்கு தெரிந்த ஒருவர் கூறினார். இதையடுத்து அட்லியை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை அவரை அணுகவிடவில்லை. அட்லியின் மேனேஜர்கள் வேண்டும் என்றே என்னை அவரை பார்க்க விடாமல் செய்வதை உணர்ந்தேன். 

கருவை மட்டும் பார்க்காமல் இரண்டு பட ஸ்க்ரிப்ட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதே நான் கோர்ட்டில் வைத்துள்ள கோரிக்கை. நான் எழுதி வைத்த 265 பக்க ஸ்க்ரிப்ட்டை அட்லி பயன்படுத்தியுள்ளார். அதனால் தான் எழுத்தாளர்கள் சங்கத்தை தான் முதலில் அணுகினேன். அவர்கள் என் புகாரை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் இயக்குனர் செல்வா. 

தீர்ப்புக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் டைம் இருப்பதால் அதுவரை என்ன செய்வது என்று தெரியவில்லை இவ்வாறு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அட்லீ தரப்பிலிருந்து கதை திருட்டு எதுவும் நடக்காதது போல அமுக்கமாகவே இருக்கின்றனர்.