'நம்பர் 1' நடிகைக்கு, தற்போது வாழ்க்கையிலும் சரி, கேரியரிரும் சரி செம ஸ்மூத்தாக போகிக்கொண்டிருக்கிறது. இதனால் மிகவும் சந்தோஷமாக தான் நடிக்கும் படங்களின் கதைகளை தெளிவாக தேர்வு செய்து நடிக்கிறார்.

இவருக்கு முதலில்  ப்ரேக் கொடுத்தது இரண்டு எழுத்து பேய் படம் தான். இவரே எதிர்ப்பார்க்காத அளவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, வெளியான மற்றொரு பேய்ப்படம் படம் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு உயரதிகாரியாக, நடித்த படத்தை இவரே தயாரித்தார். இந்த படம் போட்ட முதலுக்கு மோசம் விளைவிக்காமல் நம்பர் நடிகையை காப்பாற்றியது. 


இந்த படத்தை தொடர்ந்து ,சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான, மாவு படம், அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே மூன்று கோடிக்கு மேல் தான் சம்பளம் வாங்குவேன்... என கறாராக இருந்த நடிகை இப்போது நான்கு கோடிக்கு ஜம்ப் ஆகியுள்ளார்.

இவரிடம் கதை சொல்லும் இயக்குனர்களின் கதை பிடித்து விட்டால், தன்னுடைய சம்பளம் நான்கு கோடி என மும்பே கூறி விடுகிறாராம். யாரவது ரொம்ப அதிகமா இருக்கு என இவருடம் கேட்டால் புன்னகையை பதிலாக உதிர்க்கிராராம்.