மூலம் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சியின் வாயிலாக பெண் தேடி வருகிறார். 

16 பெண்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே 4 பெண்கள் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டனர். கோமதி என்கிற பெண் தன்னுடைய தாத்தா மரணமடைந்து விட்டதால் பாதியில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது 11 பெண்கள் ஆர்யாவிற்காக தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். 

ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் எந்த பெண் வெற்றி பெற்று ஆர்யாவை திருமணம் என்வர் என்று ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஷோ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் போட்டியளர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை பெயர் குறிப்பிடாமல் ஒரு பேப்பரில் எழுதி கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதில் ஒரு சீட்டில் உங்கள் 7 வருட காதல் வாழ்க்கையில் எது சிறந்த தருணம், எது வெறுத்த தருணம் என்ற கேள்வியை எழுதி இருந்தார், இதற்கு பதில் கொடுத்த ஆர்யா...  "உண்மையில் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, தன்னுடைய முன்னாள் காதலி  கூட இருந்த அந்த 7வருடமும் சிறந்த தருணம் தான் கல்யாணம் என்றால் 30 நாட்கள் கழித்து பதிவு நடக்கும், என் தரப்பில் நடந்தது, ஆனால் அவர்கள் தரப்பில் நடக்கவில்லை. அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக நடக்காமல் போனது அது தான் நான் வெறுத்த தருணம் என்று கூறினார். ஆனால் நான் காதலித்தவர் மேல் எந்த தவறும் இல்லை என்று உணர்ச்சிமிகு கூறினார் ஆர்யா.

ஆர்யாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத போட்டியாளர்கள் இதை கேட்டு ஒரு நிமிடம் கலங்கி விட்டனர்.