திருமணம்

ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டார்.அதில் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் படி பல பெண்கள் தொடர்பு கொண்டனர். 

நிகழ்ச்சி

இறுதியில் பார்த்தால் அது ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்று தெரிய வந்தது.அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொள்வர்.இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வார்.

அகாதா

அந்த 16 பெண்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் ஆர்யாவுடன் தனியாக சந்தித்து பேச நேரம் கிடைக்கும்.
அதன் படி காதல் கடிதம் எழுதும் போட்டியில் ரொமாண்டிக்கான காதல் கடிதம் எழுதி ஆர்யாவின் மனதை கவர்ந்தவர் அகாதா மேக்னஸ். 

ஓரின சேர்க்கையாளர்:இவரும் ஆர்யாவும் தனியாக டேட்டிங் சென்றனர்.இந்நிலையில் இவர் ஓரின சேர்க்கையாளராக பலான படமான டர்டி மேடம் எக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.இவர் வீடியோ எடிட்டர் என்று சொல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

விவாகரத்து:ஆர்யாவுக்கும் அகாதா மீது ஆர்வம் வந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் சுசைனா என்ற பெண் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்றும் தனக்கு மகன் இருக்கிறான் என்றும் கூறி அதிர்ச்சியளித்தார்.ஆனால் ஆர்யா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் அகாதாவின் விஷயங்களை தெரிய வரும் போது ஆர்யா அதை எப்படி எடுத்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.