நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் பல நடிகைகளுக்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு ஏனோ நிஜ வாழ்க்கையில் மட்டும் ஜோடி போட ஒரு பெண் கிடைக்க வில்லை. 

35 வயதை கடந்தும் இவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்ததால் இவரிடம் பல பிரபலங்கள் முன் வைத்த ஒரு கேள்வி 'ஆர்யா உங்களுக்கு எப்போ கல்யாணம் என்பதுதான்".

இப்படி பலரும் கேள்வி கேட்பதால்... தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறி தனக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தார் ஆர்யா, ஆனால் அது ஒர்க்கோட் ஆகவில்லை. இதனால் புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். 

தேர்வு செய்த முறை:

தன்னுடைய சமூக வலைதளத்தில் ஆர்யா, "நான் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும்... தன்னை திருமணம் செய்ய விருப்பம் உள்ள பெண்கள் உங்கள் முழு விவரத்தோடு, புகைப்படத்தையும் இணைத்து விண்ணப்பிக்குமாறு கூறினார்". 

ஆர்யாவின் பேச்சைக் கேட்டு கிட்டதிட்ட 70,000 பெண்கள் அவரை திருமணம் செய்ய சம்பத்தை தெரிவித்து விண்ணப்பித்தனர். இப்படி விண்ணபித்தவர்களில் இருந்து ஆர்யா 16 பெண்களை தேர்வு செய்தார். 

போட்டிகள்:

இப்படி தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்குள் கடுமையாக போட்டி நிலவியது. இப்படி பல்வேறு கட்டங்களை கடந்து இறுதி வரை மூன்று போட்டியாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் அகாத்தா, சீதா லட்சுமி மற்றும் சுசான ஆகியோர்.

ஆரியா ஜோடி யார்?

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சில சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்களால் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில், பலரது மனதில் உள்ள கேள்வியாக இருப்பது ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள போவது யார்? என்பது தான். 

வெளியான தகவல்:

இந்த நிகழ்ச்சியின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்நிலையில் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஆர்யா... எந்த பெண்ணை தான் திருமணம் செய்ய உள்ளேன் என்பதை அறிவிக்க மேடைக்கு வந்துள்ளார். 

இவர் யாரை தேர்வு செய்வார் என பல்வேறு பிரபலங்கள் மற்றும் இந்த மூன்று பெண்களின் உறவினர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், "இந்த மூன்று பெண்களும் தனக்கு பொருத்தமான பெண்கள் என்றும், இவர்களை வெளியேற்ற தனக்கு மனதில்லை, மேலும் இவர்களில் ஒருவரை தேர்வு செய்தால் அது மற்றவர்களுக்கு வலியை கொடுக்கும் என கூறி இவர்கள் மூன்று பேரையும் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என அறிவித்தார். 

ஆர்யாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத பிரபலங்கள் சிலர் பரவாயில்லை, ஏதாவது ஒரு பெண்ணை தேர்வு செய் என கூறியதற்கும் அவர்கள் கூறியதை ஏற்காமல் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாராம் ஆர்யா.