Arya and Sayish Anniversary: தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் ஆர்யா. இவரும், திரைப்பட நடிகை சாயிஷா ஆகிய இருவரும், காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர்.

 தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரும், திரைப்பட நடிகை சாயிஷா ஆகிய இருவரும், காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு, தொடர்ந்து படங்களில் பிஸியான நடித்து வந்த ஆர்யாவின், பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்தி வெளிவந்த சார்பட்டா பரம்பரை வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்திற்கு, மக்கள் மத்தியில்அமோக வரவேற்ப்பை பெற்றது. திருமணத்திற்கு, பிறகு சாயிஷா சூர்யாவுடன் ஒரு படம், ஆர்யாவுடன் ''டெட்டி'' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார். 

ஆர்யா -சாயிஷா ஜோடிகள்:

இதையடுத்து, கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது செல்ல மகளுக்கு அவர்கள், தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டி இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, ஆர்யா ஒருபக்கம் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சாயிஷாவும் பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைப்பதற்காக அதிகம் ஒர்கவுட்டில் ஈடுபட்டு வருகிறார்.

மூன்றாவது திருமண நாள்:

மேலும், ஆர்யா சாயிஷா ஜோடிகள் நேற்று மூன்றாவது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், தங்களது திருமண நாளில் போட்டில் சுற்றி திரிந்த காட்சியை, புகைப்படம் எடுத்து சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்திற்கு கீழே கேப்ஷனாக சாயிஷா ..

View post on Instagram

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..! நான் உங்களை என்றென்றும் நேசிக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன் என்னுடையவராக இருப்பதற்கு நன்றி…உலகத்தில் சிறந்த கணவர் மற்றும் அப்பா! காலத்தால் அழியாத நம்முடைய காதல் வாழ்க என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று மனைவிக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஆர்யா,

Scroll to load tweet…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..! 'தன்னை அதிகம் காதலிக்கும்' சாயிஷா என குறிப்பிட்டுவிட்டு ''actually 2nd most now"" என அவ ர்கூறி இருப்பது, ஆர்யா தனது மகளை பற்றி மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க..."அந்தக் குழந்தையே புஷ்பா தான் சார்..!" இணையத்தை கலக்கும் குட்டி புஷ்பா வீடியோ..!!