aruvi movie heroine athithi balan issue
'அருவி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்கிற பெயர் பெற்றார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இவருடைய நடிப்பை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
அதிதி பலன்:
அஜித், திரிஷா நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், திரிஷாவின் தோழியாக சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் அதிதி பாலன்.
இந்தப் படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அருவி திரைப்படம் அதிதி வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.![]()
பின் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்புகள் வந்துக்கொண்டிருக்கிறதாம். ஆனால் இவர் வெற்றிப்பட வாய்ப்புக் கொடுத்த இயக்குனருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன் என அடம் பிடித்து வருகிறாராம். 
இதனால் இவர் கால்ஷீட் கொடுப்பாரா மாற்றாரா என 5க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் காத்திருகிறார்கள் . மேலும் தொலைபேசி நம்பர் கேட்டால் கூட மெயில் ஐடி கொடுத்து அனுப்பிவிடுகிறாராம்.
கிசுகிசுப்பு:
.jpg)
அதிதி இப்படி செய்வதால் அதிருப்தியில் உள்ள இயக்குனர்கள், இவர் ஒரேதடியாக இயக்குனர் வசம் சாய்ந்துவிட்டதாக கிசுகிசுத்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த விவகாரம் எங்கே போய் முடிய போகிறது என குழம்பி வருகின்றனர்.
