அஜித் படத்தில் நடித்த அருவி ஹீரோயின் அதிதி... என்ன படம் தெரியுமா?

aruvi heroine acting with ajith movie
aruvi heroine acting with ajith movie


கடந்த வருட இறுதியில் வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட திரைப்படம் அருவி. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கி இருந்தார். இதில் அறிமுக நாயகி அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

aruvi heroine acting with ajith movie

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ஒன்றைத் தாக்குவது போல் இந்தப் படம் எடுக்கப்பட்டிருததால், சில சர்ச்சைகளும் எழுந்தன.

aruvi heroine acting with ajith movie

இந்நிலையில் இந்தப் படத்தில் அருவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதிதி பாலன் இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே... பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில்  மிகவும் முக்கியமான படம் அஜித், திரிஷா நடித்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்'. இந்தப் படத்தில் இவர் நடிகை திரிஷாவின் தோழியாக 'மழை வரப்போகுதே..' பாடலில் நடித்துள்ளார்.  ரஜினியின் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். 

aruvi heroine acting with ajith movie

ஏற்கனவே பல முன்னணி கதாநாயகிகள் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ள நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து அதிதி பாலன் பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நாயகி என்கிற இடத்தைப் பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios