ரசிகர்கள் படைசூழ... மனைவியுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த அருண்விஜய் - வைரலாகும் வீடியோ
பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய், தனது மனைவியுடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது வணங்கான் திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்தில் அவர் திடீரென விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அருண்விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பாலாவே தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இதுதவிர அருண் விஜய் நடித்துள்ள மிஷன் என்கிற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மிஷன் திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அருண் விஜய்யுடன் நடிகை எமி ஜாக்சனும் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் மிஷன், முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரபல எழுத்தாளர் - நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கி வைத்த சிவகுமார்!
மிஷன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படம் வெற்றியடைய வேண்டி நடிகர் அருண் விஜய், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஒட்டிய 14 கிலோமீட்டர் மலையை சுற்றி நேற்று இரவு தனது ரசிகர்கள் பட்டாளத்துடன் கிரிவலம் வந்தார்.
அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள் அவருடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். கிரிவலப் பாதையில் உள்ள அருள்மிகு இடுக்கு பிள்ளையார் கோவிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... திடீரென மணிரத்னம் வீட்டுக்கு படையெடுத்து வந்த பிரம்மாண்ட இயக்குனர்கள்... என்ன விசேஷம் தெரியுமா?