தல அஜித் நடிப்பில் இன்று, உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்லபடியாக விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடசலம், ஆகியோருக்கும் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் அஜித் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அல்டிமேட் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. அஜித்தின் 60 ஆவது படமாக உருவாகும் இப்படம் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில், ஏற்கனவே அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தில், அவருக்கு வில்லனாக நடித்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும், அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும். போனி கபூர் மகள் ஜான்வியும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியான வில்லை