தனது 25 வது படத்தை இயக்கித் தரும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை நடிகர் அருண் விஜய் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்டதாகவும் அதற்கு கவுதம் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

தனது 25 வது படத்தை இயக்கித் தரும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை நடிகர் அருண் விஜய் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்டதாகவும் அதற்கு கவுதம் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

’95ல் தனது 16 வது வயதில் ’முறை மாப்பிள்ளை’படத்தில் அறிமுகமான அருண் விஜய் இன்று வரை தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் ஒரு இடத்தைப் பிடிக்கவில்லை. கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற மகிழ் திருமேனியின் ‘தடம்’ போன்ற வெகு சில படங்களே அவரை நடிகர்கள் லிஸ்டில் தொடர்ந்து வைத்துக்கொள்ள உதவியிருக்கின்றன.

இந்நிலையில் மிக விரைவில் தனது 25 வது படத்தை அருண்விஜய் அறிவிக்கவிருப்பதை தெரிந்துகொண்ட அவரது நண்பர்கள் ‘இந்தப் படத்துக்கு ஒரு பெரிய டைரக்டரைப் புடிச்சி அடுத்த கட்டத்துக்கு நகர்ற வழியைப் பாரு’ என்று ஆலோசனை கூறவே சற்றும் யோசிக்காமல், ஏற்கனவே அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வில்லன் வேடம் கொடுத்த கவுதம் மேனனைத் தேடிப்போய் வாய்ப்புக் கேட்டாராம் அருண்.

அருண் விஜயின் விருப்பத்துக்கு ஓ.கே. சொன்ன கவுதம் தான் தற்போது தனியார் தொலைக்காட்சிக்காக இயக்கிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடரான’குயீன்’ஐ முடித்தவுடன் அப்படத்தைத் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.