நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பார்டர்'. அருண் விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.

அருண் விஜய்யின் 31 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடட்பட்டது. 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான 'பார்டர்' வெளியிடப்பட்டது. தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் 'குற்றம் 23 ' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்து வரும் இந்த படத்தின் மீது 
 ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை துவங்குவதற்கு முன்பே படக்குழு முடிந்து விட்ட போதும், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா முதல் அலை காரணமாக கடந்த வருடம் வெளியாக வேண்டிய பல படங்கள் இன்னும் ரிலீசாகாமல் உள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை மேலும் சினிமா துறையை வாட்டி வதக்கி வருகிறது. இதனால் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தற்போது வரை தெரியாத ஒன்றாகவே இருக்கும் நிலையில், சில படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதே போல் 'பார்டர்' படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுத்திகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.