arun kapoor support the sridevi family
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் போனிகபூர், அவருடைய மகள்கள் ஜான்வி மற்றும் குஷியை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இத்தனை நாட்கள் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியிடம் பேசாமல் இருந்த போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் தற்போது தங்கைகளுக்கும், தந்தைக்கும் ஆறுதல் கூறி வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
போனி கபூர் செய்த துரோகம்:
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 1983 ஆம் ஆண்டு மோனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அர்ஜுன்கபூர் மற்றுன் அன்ஷீலா கபூர் என இரண்டு குழந்தைகள் பிறந்த பின், நடிகை ஸ்ரீதேவி மீது காதல் வாய்ப்பட்டு போனி கபூர் தன்னுடைய முதல் மனைவி மோனாவை 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டில் ஸ்ரீதேவியை திருமணம் செய்துக்கொண்டார். 
அருஜுன் மனநிலை:
போனி கபூர் முதல் மனைவியை விவாகரத்து செய்த போது அர்ஜுன் கபூருக்கு 11 வயது, சிறு வயதில் தன்னுடைய தாயிடம் இருந்து தந்தை பிரிந்து விட்டதால் தாய்ப்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் பார்த்து வளர்ந்தார்.
கோபம்:
இந்த கோபத்தின் காரணமாக அர்ஜுன் கபூர் இதுவரை அவருடைய தந்தையிடம் பேசாமல் இருந்தார். அதே போல் தன்னுடைய அம்மாவின் வாழ்கையை தட்டிப் பறித்தால் ஸ்ரீதேவியிடமும் அர்ஜுன் கபூர் இதுவரை பேசியதே இல்லை.
மறந்து மன்னித்த அர்ஜுன்:
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தால் போனி கபூர் மனதளவில் மிகவும் நொறுங்கி போய் உள்ளார். எனவே அவருடைய நிலையை அறிந்து அர்ஜுன் கபூர் தன்னுடைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு துபாய்க்கு சென்று தன்னுடைய தந்தைக்கு ஆறுதல் கூறியது மட்டும் இன்றி ஸ்ரீதேவி இருதிச்சடங்கு வாகத்தில் ஏறி மகனாக இருந்து அனைத்து கடமைகளையும் முடித்தார். 
தற்போது தாயை பிரிந்து தவிக்கும் ஸ்ரீதேவியின் மகள்களுக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து ஆறுதல் கூறி வருகிறார் அருஜுன். மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தால் மீண்டும் தந்தை-மகன் இணைத்துள்ளனர் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
