தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதி ஜல்லிக்கட்டு போராட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போராட்டம் குறித்து அவர் பேசுகையில், இது எந்த ஒரு அரசியல் சார்பும் இல்லாமல் நான் ஒரு தமிழன் என்ற முறையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது நம்முடைய வீர விளையாட்டு இதனை நாம் ஒருபோது விட்டு கொடுக்க கூடாது என்று பேசிய அவர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு கொடுத்து பல இளைஞர்கள், ஆண்கள் , பெண்கள், என அனைவரும் களத்தில் இறங்கியுள்ளது போல தமிழக முதலமைச்சர் நம்முடன் சேர்த்து வீதிக்கு வந்து போராடினால் மட்டுமே இந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.