பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா சென்ற பின்னர், நிகழ்ச்சி சற்று போர் அடித்துப் போய்விட்டதால், சுவாரஸ்யத்தைக் கூட்ட போட்டியாளர்களுக்கு வித்தியாசமான புது புது டாஸ்குகள் கொடுக்கப்படுகின்றன.

இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் (Freez and ரிலீஸ்) என ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. முதலில் விளையாடும் சக்திக்கு ‘ஆண் போட்டியாளர் ஒருவரின் உடைகளை எடுத்து  நீச்சல் தொட்டியில் போட வேண்டும்’ எனக் கூறப்படுகிறது. 

அடுத்ததாக, ஆர்த்திக்கு ’ஏதாவது ஒரு ஹவுஸ் மேட் தலையில் மாவைக் கொட்ட வேண்டும்’ என கூறப்படுகிறது. உடனே ஆர்த்தி, ஜூலி தலையில் ஒரு பாக்கெட் கோதுமை மாவைக் கொட்டுகிறார்.

ஏற்கெனவே கொஞ்சம் கண்ணு தெரியாமல் கண்ணாடி போட்டுக்கொண்டு சுற்றி வந்த ஜூலி, வெளியில் சென்றதும் லென்ஸ் வைத்துக் கொண்டார். ஜூலி தலையில் ஆர்த்தி மாவைக்கொட்டியபோது லென்ஸில் அந்த மாவு பட்டு கண்ணை உறுத்துகிறது. இதனை ஜூலி, ஆர்த்தியிடம் கூற, ஓவியா ஸ்டைலில் ‘இட்ஸ் மை டாஸ்க்’ என கூலாகச் சொல்லிவிட்டார் ஆர்த்தி.