‘இந்தியன் 2’ படத்தில் சிம்பு ஒரு கறாரான கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா ஒரு நளினமான நர்ஸ் வேடத்தில் என்ற கிசுகிசுக்களுக்கு மத்தியில், இப்படத்தின் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், சென்னையில் தன் செட் வேலகளைத் துவங்குவதற்காக தனது அலுவலகத்தில் எளிமையான பூஜை ஒன்றை நடத்தினார். இப்போதைக்கு ‘இந்தியன்2’ குறித்த ஒரிஜினல் செய்தி இது ஒன்றுதான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஷங்கரின் ‘எந்திரன்’ மற்றும் ‘2.0’ ஆகிய இரு படங்களுக்கும் ஆர்ட் டைரக்டராகப் பண்புரிந்த முத்துராஜே இந்தியன் 2’ படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் உக்ரைன், போலந்து நாடுகளில் படமாக்கப்பட இருந்தாலும் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் படத்தின் முதல் ஷெட்யூல் நடைபெறவிருப்பது சென்னையில்தான்.

இதையொட்டி செட் பணிகளை நாளை புதன்கிழமை தொடங்குவதற்காக தனது உதவியாளர்களுடன் எளிமையாக பூஜை நடத்தினார் முத்துராஜ். இப்பூஜைக்கு நேரில் வராமல் ஷங்கரும், கமலும் கலை இயக்குநருக்கு வாழ்த்துகளை மட்டும் தெரிவித்தனர்.

இப்போதைக்கு சென்னை ஷெட்யூலில் சுமார் 15 நாட்கள் மட்டுமே நடிக்க கால்ஷீட் தந்துள்ள கமல், தமிழக இடைத்தேர்தல் முடிந்த பிறகே படத்தின் மீதிப்பகுதியில் நடிக்க தேதிகளை அறிவிப்பாராம்.