இசைப்புயல் எ.ஆர்.ரகுமான் இசையில் 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் இடம் பெற்றிருந்த டேக் இட் ஈஸி என்கிற பாடலை ஒரு நேரடி நிகழ்ச்சிக்காக மாற்றி அமைக்க உள்ளாராம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதனால் பாடலில் இடம் பெற்றுள்ள சரணத்தில் வெவ்வேறு வார்த்தைகளை எப்படி உபயோகிக்கலாம் என்று ரசிகர்களிடம் ஐடியா கேட்டு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முக்கியமாக ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப், ரூபாய் நோட்டு தடை பற்றியெல்லாம் எழுதாமல், தனித்துவமான, நகைச்சுவை உணர்வுடன் ஐடியா கொடுக்கலாம் என்று ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் இசைப்புயல் . 

இந்த பாடல் இடம் பெற்ற படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார், இந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் வைர முத்து எழுதி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.