arjun reddy hero intro in tamil movie
இந்த வருடம் தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. தற்போது இந்தப் படத்தின் ரீமேக்கில்தான் நடிகர் விக்ரம் மகன் துருவ் இயக்குனர் பாலா இயக்கத்தில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் நடித்த நாயகி ஷாலினி பாண்டே தற்போது தெலுங்கில் வெற்றி பெற்ற படமான 100 % லவ் படத்தின் தமிழ் ரீமேக்கில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த நடிகர் விஜய தேவரக்கொண்டாவும் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
.jpg)
ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் 'ஆனந்த் ஷங்கர்', இருமுகன் படத்தைத் தொடர்ந்து இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க விஜய தேவரக்கொண்டா கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
