arjun help the singer
அர்ஜுன்
ஆக்சன் கிங் அர்ஜூன் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகரும், இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி.ராமசாமி புகழ்பெற்ற கன்னட நடிகர் ஆவார். அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சொல்லி விடவா
இவர் கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். இவர் நடித்த திரைப்படங்களில் அதிகமான சண்டை காட்சிகளில் நடித்ததால் ஆக்சன் கிங் என்றழைக்கப்பட்டார்.
இந்நிலையில் அர்ஜுன் இயக்கி தயாரித்துள்ள படம் சொல்லி விடவா.இந்த படத்தில் இவரது மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஜெயந்தி
இந்நிலையில் ஒரு விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அர்ஜுன் ஸ்பெஷல் கெஸ்ட்டாக சென்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் ஜெயந்தி.இவர் வறுமையில் பிறந்து வறுமையுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார். பாடல் வகுப்புகளுக்கு சென்று இவர் பாட்டை கற்கவில்லை. அருமையாக பாட கூடிய இவர் பாடல்களை கேட்டே தமது திறனை வளர்த்துக்கொண்டவர்.ஜெயந்தி தற்கால ஏகலைவன் தான்.
படிப்பு செலவு
ஜெயந்தியின் பாடலை கேட்டு அவரை வெகுவாக பாராட்டிய அர்ஜுன் உங்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவுக்காக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
பாராட்டு
அர்ஜுனின் இந்த உதவும் மனப்பான்மையை கண்டு ஒட்டுமொத்த அரங்கமும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் இவரின் வாக்குறுதியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
