நடிகர்களின் வாரிசுகள் தற்போது திரையுலகில் காலடி எடுத்து வைத்து பிரபலமாகி வருகின்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே நீடிக்கின்றனர்.

அப்படி அறிமுகம் ஆனவர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், இவர் முதலில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில், விஷால் ஜோடியாக ' பட்டத்து யானை' படத்தில் நடித்தார், இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் எந்த வாய்ப்புகளும் அமையவில்லை.

தற்போது ஒரு இந்தி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் சில காரணங்களால் இந்த படமும் கை நழுவியது.

இந்நிலையில், எந்த வாய்ப்புகளும் அமையாததால் தனது மகளை வைத்து 'காதலின் பொன்வீதியில் என்ற படத்தை அர்ஜுன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பணியாற்றும் நபர்கள், இவர் பெரிய நடிகரின் மகள் என்பதால் கண்டிப்பாக பந்தா காட்டுவர் என எதிர்பார்த்தர்களாம், ஆனால் அவர்கள் நினைத்ததற்கு முரண்பாடாக நடந்து கொள்கிறாராம்.

அவர் , ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசியும், மிகவும் அன்பாக பழகுகிறாராம் , அதே போல கேரவேனில் அமர்ந்து சாப்பிடாமல் அனைவருடனும் அமர்ந்து தான் சாப்பிடுகிறாராம்.

இதனை கண்ட அங்கு பணியாற்றும் நபர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனராம், காரணம் எந்த ஒரு பெரிய நடிகரின் மகளும், இப்படி நடந்து கொண்டதில்லை, மேலும் அவர் ஒரு நாயகியாக இந்த படத்தில் நடித்தாலும் மிகவும் சாதாரணமாக நடந்து கொள்கிறார் என கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது .