அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி படத்தின் அப்டேட் பற்றி, விஜய் ரசிகர்கள் படக்குழுவினரிடம் கேட்டு வந்தனர். 

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி படத்தின் அப்டேட் பற்றி, விஜய் ரசிகர்கள் படக்குழுவினரிடம் கேட்டு வந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத தகவல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், பிகில்' படத்தின் அப்டேட் பற்றி வெளியிட்டுள்ளார். சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்காத அதே நேரத்தில் ஆச்சரியப்படும் ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் இன்று என்ன தகவல் வெளியாகும் என ஆவலோடு காத்திருந்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடும் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 'பிகில்' படத்தில் ஆஸ்கார் நாயகன் இசையில் 'வெறித்தனம் என தொடங்கும் பாடலை பாட உள்ளதாக அறிவித்துள்ளார்' . இந்த பாடல், விவேக் வரிகளில் உருவாகியுள்ளது.

முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாட உள்ள தகவலோடு ஒரு சில புகைப்படங்களையும் அர்ச்சனா வெளிட்டு விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளார்.


Scroll to load tweet…