கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர்கள் ஆவது புதிதல்ல.அதே போல் இயக்குனர்களும் இப்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகராக இருந்து இயக்குனராக மாரி சாதித்தவர்கள், உலக நாயகன் கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை பல முன்னணி ஹீரோக்கள் உள்ளனர். 

இந்த வரிசையில் விரைவில் இயக்குனர் ஆகவுள்ளார் தனிஒருவன் மூலம் அதிரடி ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்தசாமி.

தற்போது இவர் 'போகன்', 'சதுரங்க வேட்டை 2' என கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

தன்னிடம் இரண்டு கதைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றை 2017 இறுதியில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரவிந்தசாமியின் இயக்கும் படம் குறித்த தகவலை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.