Aravindasam who takes the incarnation as director The project is to surprise fans in the first film ...
இயக்குநராக அவதாரம் எடுக்க இருக்கும் நடிகர் அரவிந்தசாமி தான் இயக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் ஆச்சரியப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அரவிந்தசாமி, தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு, நடிப்பில் பிசியாகி விட்டார் அரவிந்த்சாமி. ‘போகன்’ படத்தில் நடித்து மாறுபட்ட நடிப்பை வெளியிட்டு அசத்தினார்.
தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி, ‘நரகாசூரன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், படம் இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருக்கும் அரவிந்த்சாமி, அடுத்த ஆண்டு இறுதியில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘என்னிடம் இருந்து இப்படியொரு கதையா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு எனது முதல் படம் இருக்கும்‘ என்று உறுதியாகச் சொல்கிறார் அரவிந்த் சாமி.
