ரோஜா படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் அரவிந்த்சாமி, பின் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் தனிஒருவன் படத்தின் மூலம் வில்லனாக மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ஹீரோ ஜெயம் ரவியை விட இவரது நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது.

தற்போது சதுரங்க வேட்டை 2 மற்றும் பெயரிட படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அரவிந்சாமி அவ்வப்போது சமூக அக்கறையோடு தமிழ் நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து தன்னுடைய கருத்தை முன்வைத்து வருகிறார். 

இவர் கூறும் கருத்துக்கள் பொதுவாக மக்களின் மனதை புரிந்த கருத்துக்களாகவே அமையும். இப்படி கூறிவரும் கமல், அரவிந்த்சாமி போன்றோர்கள் மக்களை தூண்டிவிடுகிறார்கள் என ஒரு சிலர் கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர் அரவிந்த்சாமியிடம் மிகவும் மோசமாக உன் பொண்டாட்டி எங்க..? உன் அப்பா உடைய உண்மையான பெயர் என்ன என சர்ச்சையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அரவிந்சாமி 'என் பொண்டாட்டி அவ புருஷன் கூட இருக்க, என் அப்பா உயிரோட இருந்திருந்தா பதில் கேட்டு சொல்லி இருப்பேன் என கூறியுள்ளார் . மேலும் நாட்டுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் பா... என கூல்லாக பேசி இருக்கிறார்.