தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று ஒற்றுமையாக இருப்பவர்கள் நாளை எதிரியாக கூட மாறலாம் இதில் எதுவுமே நிரந்தம் இல்லை.
அந்த விதத்தில், தனி ஒருவன்' படத்தின் மூலம், வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்து நடிப்பின் மூலம் தனி ஒருவனாக நிலைத்தவர்கள் அரவிந்சாமி, மற்றும் ஹீரோவாக மனதில் நின்றவர் ஜெயம் ரவி .
அந்த படத்தின் வெற்றிக்கே வில்லன் நடிகர் தான் காரணம் என பலராலும் பேசப்பட்டது, அதை தொடர்ந்து எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் போகன் படத்திலும் கைக்கோர்த்தனர் இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
ஆனால், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே ஓரு சில பிரச்சனை வந்ததாகவும் இதனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
தற்போது இரண்டு பேர்களையும் மீண்டும் நண்பர்களாக்க இரண்டு தரப்பில் இருந்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
