Aravind Samy is the villain of the movie Ajith in the loyalty film

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் தல-க்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறாராம்.

விவேகம் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்க கூடாது என்று ரசிகர்கள் அலறியபோதும், அந்த வாய்ப்பை சிவாவுக்கே வழங்கினார் அஜித்.

அஜித் - சிவா கூட்டணியின் 4-வது முறையாக இணைந்து படத்தின் தலைப்பை வெளியிட்ட பிறகுதான் தல ரசிகர்கள் சற்று சாந்தமாயினர். விசுவாசம் என்ற தலைப்பை கேட்ட பிறகு ரசிகர்கள் ஆனந்தத்தில் ஆட்டம் போட்டனர். அஜித், தனது ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக இந்தப் படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், விசுவாசம் படத்தில் தான் நடிக்கவில்லை என்று நிவின் பாலி மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், அரவிந்த்சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிகின்றன.

தனி ஒருவன் படத்தைப் போன்று, இந்தப் படத்திலும் அரவிந்த்சாமி வில்லனாக நடித்தால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடும்.

மேலும், இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், ஜனவரி 19-ல் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.