பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடி, தன்னுடைய நேர்மையான பேச்சு மற்றும் வெளிப்படையான குணத்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா. 

இவர் எந்த அளவிற்கு மிகவும் பிரபலமோ அதே அளவிற்கு ஓவியாவின் காதலும் மிகவும் பிரபலம். இவருடைய காதல் வெற்றிபெற வேண்டும் என... கடவுளிடம் வேண்டிக்கொண்ட ரசிகர்களும் பலர். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது முதலில் ஓவியாவின் காதலை ஏற்றுக்கொண்ட, ஆரவ் பின்பு மற்ற சில போட்டியாளர்களின் பேச்சை கேட்டு இவரை தவிர்க்க துவங்கினார். 

ஒரு நிலையில் ஓவியா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் சகஜ நிலைக்கு திரும்பிய  ஓவியா... மன உளைச்சலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறி... திரைப்படங்கள் நடிப்பதில் பிஸியாக மாறினார். 

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, ஓவியாவின் காதலை ஏற்று கொள்ள வில்லை என்றாலும், வெளியே வந்ததும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றியதால் இவர்களுக்குள் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. 

இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது அதில் ஓவியா கலந்து கொண்டார். இந்த விழாவின்போது ஆரவ்வுடன் ஓவியா எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. மற்ற பிக்பாஸ் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாததால் ஓவியாவின் காதலில், ஆரவ் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.