arav advise gayathiri

பிக் பாஸ் நிகழ்ச்சியில், அடுத்தவர்களுக்கு இடையில் சண்டை மூட்டி விட்டு கிளுகிளுப்போடு இருப்பவர் ஆர்த்தி. இவர் தந்திரம் பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும் போட்டியாளர்கள் ஒருவர் கூட இதை கண்டு பிடிக்கவில்லையா என பலர் கூறி வந்தனர்.

நேற்று கூட ஜூலி தனக்கு காயத்திரி அக்கா மீது எந்த கோபமும் இல்லை, பிரச்னையை மூட்டி விடுபவர் ஆர்த்தி தான் அவர் மீது தான் தனக்கு கோபம் என்பது போல கூறி இருந்தார்.

இந்நிலையில், நேற்று சாதாரணமாக காயத்திரியிடம் பேசிக்கொண்டிருந்த ஆரவ், ஆர்த்தி உங்களை வைத்து கேம் விளையாடுவது போல் தெரிகிறது. அவர் ஒரு பிரச்சனையை உருவாக்கிவிட்டு அதில் உங்களை கோர்த்து விட்டு போகிறார், எனவே அவரிடம் மட்டும் கொஞ்சம் சூதானமா நடத்துகோங்க என்று அறிவுரை கூறினார்.

இதுநாள் வரை தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என சுதந்திரமாக மேக் அப் போட்டுகொண்டு சுத்தி வந்த ஆர்த்திக்கு முதல் முறையாக அலர்ட் மணி அடித்துள்ளார் ஆரவ்.