aram movie promotion speech for gopi nainaar

கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்துள்ளார் 'அறம்' திரைப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

நயன்தாரா நாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. 

நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி என்றும் சமூக அவலங்கள் பற்றி இந்தப் படம் பேசும் எனவும் நடிகர் பழனி பட்டாளம் கூறினார். 

பின் இந்தப் படத்தின் இயக்குனர் கோபி நயினார் பேசியபோது... சினிமா துறையில் பல அவமானங்களை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை தேற்றியது மீடியாக்கள்தான். இந்தப் படத்தை நான் எடுப்பதற்குக் கூட பல தடைகள் வந்தது. ஆனால் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்ததால் இந்தப் படத்தின் பணிகள் நல்லபடியாக முடிந்தது.

மேலும் நயன்தாரா மேடம் இந்தப் படம் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும்... அது வரை நான் உங்களுடன் இருப்பேன் எனவும் கூறியது பெருமையாக உள்ளது என்று கூறியவாறு கண்கலங்கி விட்டார்.