தன்னுடைய ஈடு இணையில்லா இசையால் உள்நாட்டு ரசிகர்கள் முதல் வெளிநாட்டு ரசிகர்கள் வரை, பலரையும் தன்னுடைய தனித்துவமான இசையில் நனைய வைத்தவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.

இவரின் இசைக்கு, பல பிரபலங்களும் தீவிர ரசிகர்கள் தான். இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் ஒன்றை, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

அதாவது, ஆகஸ்ட் 10 ஆம் தேதி, சென்னையில் இவருடைய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், "இந்த செய்தியை வெளியிடுவதில் மிகவும் திரில்லாக உள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி, நந்தனம் YMCA மைதானத்தில் ரசிகர்கள் முன்பு லைவ் ஷோ நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியால் ஏ.ஆர்.ரகுமான் இசை ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.