ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய பாடல்களை கெடுக்கும் விதத்தில், அதனை ரீமேக் செய்வது குறித்து, சமீபகாலமாகவே தன்னுடைய கோவத்தை வெளிக்காட்டி வருகிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல்  ரீமேக் செய்யப்பட்ட போது கூட, அது தனக்கு பிடிக்கவில்லை என்றும்,   சில பாடல்கள் மிகவும் மோசமாக எரிச்சலூட்டுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, தற்போது நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் வெளியான. 'டெல்லி 6 ' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான மசக்கலி பாடல் ரீமேக் குறித்து கொதித்தெழுந்து ட்விட் செய்துள்ளார்.

இதில், குறுகிய வெட்டுக்கள் இல்லாமல்... துக்கம் இல்லாமல், எழுதி,  திரும்பவும் திருத்தப்பட்டு ஒழுங்காக உருவாக்கப்பட்டது.  என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி  ஒரிஜினல் பாடலை கேட்டு மகிழுங்கள் என கூறியுள்ளார்.  

அந்த ட்விட் இதோ...