ar rahmana movie will be released on August 25th

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘ஒன்ஹார்ட்’ திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.

முன்னணி இசைக்கலைஞரான ஏ.ஆர்.ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் வகை படம்தான் ‘ஒன்ஹார்ட்.’.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் மேற்கொண்ட இசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது 16 இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரே படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கான ஒலி கலவை முழுவதும் டால்பி அட்மாசில் உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் மூன்று தமிழ் பாடல்கள் உள்பட 16 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

இதனை ஏ.ஆர்.ரஹ்மானின் தொழில் ரீதியான பயோகிராபி என்று சொல்லலாம். அவர் ஒரு இசைக்குறிப்பை எப்படி உருவாக்குகிறார்? அதனை இசைக் கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார்? அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக் கலைஞர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதை காட்டும் படம்.

இந்தப் படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.