ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனுடன்... யுவான்ஷாங்கர் ராஜா இணைந்து பாடிய பாடல்..! வீடியோ இதோ..!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, யுவன் ஷங்கர் ராஜா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனுடன் இணைந்து பாடிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.
 
ar rahman son ameen and yuvanshankar raja devotional song released

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, யுவன் ஷங்கர் ராஜா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனுடன் இணைந்து பாடிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.

இந்த பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் வருகை தந்தபோது... மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் இது.  உலக அளவில் புகழ் பெட்ரா பாடல் என்றும் இதனை கூறலாம்.

ar rahman son ameen and yuvanshankar raja devotional song released

இப்பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறுகையில், ' நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்'. இந்த தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். இந்த பாடல் எதிர்மறை எண்ணங்களை தோற்கடித்து , மனதிற்குள் புதிய உச்சகத்தை உருவாக்கும் என தெரிவித்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

ar rahman son ameen and yuvanshankar raja devotional song released

அதே போல் இப்பாடலில் பாடிய அனுபவம் சிறிது, ஏ.ஆர். அமீன் கூறியபோது, 'நபிகளை போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது'. இந்த இனிய திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி அருளட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள வீடியோ இதோ...
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios