சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம், 'தர்பார்'. இந்நிலையில் இந்த படத்தின் சில HD புகைப்படங்களை வெளியிட உள்ளதாக ஏற்கனவே படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீண்ட இடைவெளிக்கு பின், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

குறிப்பாக படப்பிடிப்பில் இருந்து, படக்காட்சிகள் மற்றும், புகைப்படங்கள் எதுவும் வெளியாகிவிட கூடாது என பல்வேறு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களுக்கும், கிரியேட்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக hd புகைப்படங்களை வெளியிட்டு, இதனை சிறந்த முறையில் டிசைன் செய்பவர்களுடைய புகைப்படம் அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதன் சரியாக 7 மணிக்கு, ரஜினியின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Scroll to load tweet…