இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து  'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நீண்ட இடைவெளிக்கு பின் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிகாந்தின் அசத்தல் நடிப்பை பார்க்க இப்போதே பல, ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். காதல், காமெடி, அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகுந்த பொருள்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் , பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது மூன்று கதாநாயகிகளுக்கு ஸ்கெச் போட்டு, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் முருகதாஸ். விரைவில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.