இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வந்தாலும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் அமீன் ஏ.ஆர்.ரஹ்மானை ஜெராக்ஸ் எடுத்ததை போல உருவத்தில் அப்படியே இருக்கிறார். 

அமீன் ரஹ்மான் ஓகே கண்மணி, ஓகே பங்காரம் தெலுங்கு படத்தில் ‘மவுலாமா வா சலிம்’என்ற பாடலை பாடியுள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷனின் நடிப்பில், ‘நிர்மலா கான்வெண்ட்’என்ற திரைப்படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலைப் பாடியுள்ளார்.

அடுத்து அப்பாவுடனும், தனித்தும்  சில ஆல்பங்களை தயாரித்து இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.அமீன். சமீபத்தில் ஹானஸ்டி என்கிற ஆல்பத்தை இசைத்திருந்தார். அப்பாவை போலவே இசைத்துறையில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.