ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடி வரும் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 பெண்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 5 பெண்களுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

மேலும் ஆர்யா இறுதி போட்டியாளர்களான அனைத்து பெண்கள் வீட்டிற்கும் சென்று வருகிறார். அந்த வகையில் இவர் கும்பகோணம் பொண்ணு அபர்ணதி வீட்டிற்கும் சென்றார். ஆர்யா சென்ற நேரத்தில் அபர்ணதியின் தங்கை ஜோ கல்லூரி ப்ரோஜெக்ட் விஷயமாக வெளியூருக்கு 'Ineternship' சென்றுவிட்டார்.

அபர்ணதியின் அப்பாவும் வெளிநாட்டில் வேலை செய்வதால் உடனடியாக வர முடியாத சூழல்... ஆர்யா ஆபரணதி வீட்டிற்கு  சென்ற போது, இவர்கள் இருவரும் இல்லாததைக் கண்டு என்னை ஏமாற்றி விட்டாய் என்று கூறினார். ஆனால் தொலைக்காட்சியிலோ ஆர்யாவை பார்க்க விருப்பம் இல்லாததால் தான் அவருடைய தங்கை கல்லூரிக்கு சென்று விட்டதாக தெரிவித்திருந்தனர். 

இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள, அபர்ணதியின் தங்கை... உண்மையில் கல்லூரி வேலையாக வெளியூர் சென்று விட்டேன் எவ்வளவோ முயன்றும் வர முடியவில்லை என்றும் தொலைக்காட்சியில்  TRPக்காக அபர்ணதி பற்றி தவறாக சித்தரிதுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

இப்படி தவறாக சித்தரிப்பதன் மூலம் போட்டியாளர்களை வெளியேற்றலாம் என்பது தான் தொலைக்காட்சியின் திட்டம் என்றும்  TRPக்காக அபர்ணதியை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.