அப்பாடா 13 வருஷத்துக்கு அப்புறம் ஒண்ணு சேர்ந்த சூப்பர் ஜோடி... இன்னும் 2 நாட்களில் டீசர் ரெடி... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு...!

2006ம் ஆண்டு வெளிவந்த ரெண்டு திரைப்படத்தில் அனுஷ்கா, மாதவன் இணைந்து நடித்தனர். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அரோபிய குதிரைப் போல வந்த அனுஷ்கா, ரசிகர்களின் மனதை அழகாக கொள்ளையடித்துச் சென்றார். அதன் பின்னர் இருவரும் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், ஒன்றாக சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையாமல் இருந்தது. மேலும் உடல் எடை கூடியதால் அதனை குறைப்பதற்காக வெளிநாடு பறந்து சென்றார் அனுஷ்கா. தற்போது உடல் எடையை குறைத்த பின்னர், பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பாகமதி, சைரா திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் படம் "நிசப்தம்". இதில்  13 வருடங்களுக்குப் பிறகு அனுஷ்காவுடன் மாதவன் ஜோடி சேர்ந்துள்ளார்.ஹேமந்த் மாதுக்கர் இயக்கிய இந்த படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாய் பேசாத,  காதுகேளாத ஓவியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். சாக்‌ஷி என்ற கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஓவியம் வரைவது போன்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாக செம லைக்குகளை அள்ளியது.

இதேபோன்று மகா என்ற கதாபாத்திரத்தில் புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி அறிமுகம் ஆன போஸ்டரும் சோசியல் மீடியாவில் வைரலானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் அப்டேட் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடும் விதமாக நவம்பர் 6ம் தேதி "நிசப்தம்" படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அனுஷ்காவின் பிறந்தநாள் என்பதால் டீசரை வெளியிடுவதில் படக்குழு அதிக ஆர்வம் காட்டிவருகிறது.