பிரபல கிரிக்கெட் வீரர், விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்சியாக்கி உள்ளது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர், தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவும் உள்ளார்.

சமீபத்தில் கூட சொகுசு காரில் பயணித்தபடி சாலையில் குப்பையை வீசியவரை காரில் விரட்டி சென்று, தன்னுடைய கணவரை வீடியோ எடுக்க வைத்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் சொத்து மதிப்பின் விவரங்கள் வெளியாகி உள்ளது. 

ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், ஒரு படத்திற்கு சம்பளமாக 9 கோடி வாங்குகிறார். விளம்பரப்படங்களில் நடிக்க 4 கோடி பெறுகிறார். 

மேலும் தற்போது இவர் மும்பையில் வசிக்கும் வீட்டின் மதிப்பு உட்பட இவருக்கு ரூ.220 கோடி சொத்துக்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.