Anushka said no to prabhs

சமீபத்தில் வெளிவந்து 1500 கோடி வசூலித்த படம் பாகு பலி . தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது. இதற்காக அதில் நடித்த நடிகர் பிரபாஸ் வேறு ஏதும் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

இவர் மட்டுமல்ல நாயகி அனுஷ்கா, தமன்னாவும் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தனர். 

பாகு பலி படத்தில் நடிப்பதற்கு முன்பே பல படங்களில் அனுஷ்காவும் பிரபாசும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே பில்லா, வராதி, ரபெல், மிர்ச்சி போன்ற இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பாகு பலியில் இவர்கள் இருவரது ஜோடி மக்களை கவர்ந்தது. 

இதற்கிடையில் மக்கள் நடிகர் பிரபாசும் நடிகை அனுஷ்காவும் படங்களில் ஜோடி சேர்ந்தது போல் சொந்த வாழ்கையிலும் இணைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் எங்களுக்குள் ஏதும் இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றே கூறுகிறார்கள்.

இதற்கிடையில் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவை அணுகிய போது நோ சொல்லிவிட்டாராம் காரணம் தெரியாமல் முழிக்கிறது திரை உலகம்.