anushka open talk her love

நடிகை அனுஷ்கா கோலிவுட் திரையுலகில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.

இவருக்கு வயது அதிகரித்துக்கொண்டு போகப் போக, இவருடைய திருமணத்தைப் பற்றிய வதந்திகளும் பஞ்சம் இல்லாமல் வந்துகொண்டு தான் உள்ளது.

இவர் பிரபாஸுடன் பாகுபலி படத்தில் நடித்த போது, பிரபாஸுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு பல்வேறு தகவல் வெளியானது. ஒருநிலையில் கடுப்பான அனுஷ்கா, இது போன்ற வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இவர் காதலித்த கிரிக்கெட் வீரர் பற்றி மனம் திறந்துள்ளார். தனக்கு சிறு வயதில் இருந்ததே கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். இதனால் முதல் முதலில் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மீது தான். நாளடைவில் அது காதலாக கூட மாறியது எனக் கூறியுள்ளார் அனுஷ்கா