anushka open talk

நடிகை அனுஷ்கா ஆயிரம் கிசுகிசுக்களில் சிக்கினாலும் அதைப் பற்றி சற்றும் சட்டை செய்யாமல் தரமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், அவர் கூறியுள்ளவை: 

சினிமாத் துறையில் பல சிறந்த கதாநாயகிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட முடியும். 

மேலும் பல திறமையான நடிகைகள் இருந்தும் ஒரு சில நல்ல படங்கள் என்னுடைய திறமையை வெளிக் கொண்டுவந்து நடிக்கும் படி அதிர்ஷ்டவசமாக அமைந்தது. இப்படிப் பட்ட படங்களை நான் ஒரு வேளை தவற விட்டிருந்தால் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பேன்.

நான் நடித்ததில் முக்கியமான படங்களாக நான் கருதுவது, அருந்ததி, ருத்ரமா தேவி, இஞ்சி இடுப்பழகி மற்றும் பாகுபலி ஆகிய படங்கள். இந்த அனைத்துத் திரைப்படங்களிலும் உயிரையே கொடுத்து உழைக்கும் இயக்குனர்களுடன் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்.

ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கதையம்சம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். அது முன்னணி கதாநாயகனின் படமாக இருந்தாலும்...! என்று தன்னுடைய மனதில் பட்டதை ஆணித்தரமாக அடித்துக் கூறியுள்ளார் அனுஷ்கா.