எப்படி இருந்த அனுஷ்கா? இப்படி ஆகிட்டாங்களே! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 11, Feb 2019, 5:25 PM IST
anushka new photo gallery spread in online
Highlights

உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்க வரை சென்று சிகிச்சை பெற்று வந்த அனுஷ்கா தற்போது, புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.
 

உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்க வரை சென்று சிகிச்சை பெற்று வந்த அனுஷ்கா தற்போது, புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா 34 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல், தொடர்ந்து படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கையில் வைத்திருக்கும் இவர், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்தார். இந்த படத்தில் நடித்து முடித்த பின் உடல் எடையை குறைக்க அனுஷ்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவரால் எடையை குறைக்க முடியவில்லை.

பாகுபலி படத்தில் கூட இவரை ஒல்லியாக காட்ட ஸ்பெஷல் எபெக்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பட வாய்ப்புகள் குறையவே, பெற்றோரின் ஆசைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

திருமணம் நடைபெற வேண்டும் என பெற்றோருடன் பல்வேறு கோவில் குளங்களுக்கு சென்று, திருமண தடை நீங்க பூஜைகள் செய்தார். இருப்பினும் ஒரு சில காரணங்களால் இவருக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை.

எனவே மீண்டும் தன்னுடைய கவனத்தை படங்கள் நடிப்பதில் செலுத்தியுள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஒன்றில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து திரும்பிய பின் அனுஷ்கா புதிய போட்டோ சூட்ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

இதில் அனுஷ்காவை பார்த்தவர்கள், எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆகிவிட்டாரே என மூக்கு மேல் விரல் வைக்கிறார்கள். காரணம் அந்த அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறியுள்ளார். 

loader