anushka about the weight issue

நடிகை அனுஷ்காவிற்கு தெலுங்கு மட்டும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்கள் உள்ளனர். அனைவருடைய எதிர்பார்ப்பிற்கு உரிய பாகுபலி படத்திலும் இவர் தான் நாயகி.

இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு உடல் எடையை அதிர்க்கரித்த அனுஷ்கா அதன் பிறகு நடித்து வெளிவந்த சிங்கம், பாகுபலி பஸ்ட் லுக் ஆகியவற்றில் குண்டாகவே தோற்றம் அளித்தார். இதனால் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வருவதாக மீடியாக்கள் கிசுகிசுத்தன.

தற்போது தான் ஏன் குண்டாக மாறினேன் என விளக்கம் கொடுத்துள்ளார் அனுஷ்கா. அவர் கூறுகையில், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு தான் ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அதன் காரணமாக நீண்ட நாள் பெட் ரெஸ்டில் இருந்ததன் காரணமாக தான் தன்னால் பல நாட்கள் சரிவர உடல்பயிற்சி செய்ய முடிய வில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தான் தீவிர உடல் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், சீக்கிரம் ரசிகர்களுக்கு பிடித்த போல் தோற்றம் அளிப்பேன் என கவலையோடு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.