பிளாக் ஃப்ரைடே , தேவ் டி, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குனர், அனுராக் காஷ்யாப் தற்போது நடிகை டாப்ஸி நடித்து வரும் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

டாப்ஸி, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் கதையின் நாயகியாக நடித்து வரும் திரைப்படம் 'கேம் ஓவர்'. இந்த படத்தை தான் அனுராக் காஷ்யப் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்.

இந்த படத்தை, நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கிய இயக்குனர்m அஸ்வின் சரவணன் இயக்குகிறார். விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தை " Y நாட் ஸ்டுடியோஸ்" உடன் இணைந்து ரிலைன்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து, இந்தியில் இதனை ரீமேக் செய்ய பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை டாப்ஸி நடித்த 'பிங்க்' திரைப்படம் தற்போது தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. டாப்ஸி நடித்த கதாப்பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.