நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் , திரை நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா, அதர்வா நடித்து கடந்த ஆண்டு வெளியான  இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் அனுராக் காஷ்யப். இந்தி திரைப்பட இயக்குநரான இவர், பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியை  தனது டுவிட்டரில் டேக் செய்து  அதிர்ச்சிரமாக வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் மோடியின் டுவிட்டரை பின் தொடரும் ஒருவரை சுட்டிக்காட்டிஇ அன்பான மோடி அவர்களே, உங்களது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.. இந்த வெற்றி அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் கூறியதாற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், உங்களை பின் தொடர்பவர்கள், என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போல் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி கையாள்வது என தயவுசெய்து தெரிவியுங்கள்.

அனுராக் காஷ்யப்பின் இந்தி வாழ்த்துச் செய்தி இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்