'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் அனைத்து திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தவர், இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக, 'கொடி' படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றதால். தமிழில் தொடர்ந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் சற்று குறைவாகவே தான் இவருக்கு கிடைத்து வருகிறது.

ஆனால், தெலுங்கில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் தற்போது, நடிகர் ராமிற்கு ஜோடியாக நடித்து வரும் 'ஹலோ பிரேம கோஸம்' என்ற படத்தில் நடிக்கும் போது இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும்   பிரகாஷ்ராஜுக்கும் இவருக்கும் படப்பிடிப்பு தளத்தில் சண்டை வந்ததாக கூறப்பட்டது. 

ஆனால் இப்படி வெளியான தகவல் பொய் என்று, நிரூபிக்கும் விதத்தில் பிரகாஷ்ராஜுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை அனுபமா வெளியிட்டுள்ளார். மேலும் சிலர்,  திட்டமிட்டு இப்படியொரு வதந்தியை பரப்பிவருவதாக அனுபமா கவலையோடு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரகாஷ்ராஜ் எனக்கு தந்தை போன்றவர், அவருடன் நான் ரகளை செய்ததாக வெளியான செய்தி கமெடியாக உள்ளது' என கூறியுள்ளார்.