அவிங்க ரெண்டு பேருக்கும்தான் வேற வழியில்ல. நீங்களுமாய்யா அவங்கள விடாம விரட்டுவீங்க என்று கமெண்ட் அடிக்கத்தோணும் இந்த செய்தியைப் படிக்கும்போது... ஆனாலும் வேறு வழியில்லை...கவிப்பேரரசுவின் ட்விட்டர் பதிவுக்கு ரெண்டே வார்த்தைகளில் கமெண்ட் போட்டிருக்கிறார் ட்விட்டர்காட்டு சண்டைக்காரி பாடகி சின்மயி. அண்டங்காக்கா கொண்டைக்காரி இருக்கும்போது ட்விட்டர்காட்டு சண்டைக்காரி இருக்கக்கூடாதா என்று சமாதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து அடுத்து ஆட்சி அமைய வாழ்த்திவிட்டு வந்த வைரமுத்து அத்தோடு சைலண்ட் மோடுக்குப் போயிருக்கலாம். ஆனால் உற்சாகத்தின் மிகுதியில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு சால்வை போர்த்திய புகைப்படத்தை வெளியிட்டு ...தமிழினம் மீளவும்...தமிழ்நாடு வாழவும்...தளபதி ஆளவும்...என்று ஒரு குட்டிக் கவிதை மாதிரி ஒன்றைத் தீட்டியிருந்தார்.

அதை உடனே மோப்பம் பிடித்த அவரது உள்ளம் கவர் கள்வி சின்மயி ‘ஓ.கே. தென்’ என்று ரெண்டே வார்த்தைகளில் நூறு அர்த்தம் தோணும்படி கமெண்ட் போட்டிருக்கிறார். இவர்களது இந்த கூடலுக்குக் கீழே கமெண்ட்கள் குவிந்துகொண்டிருக்க ஒரு விபரீதமான நபர், ‘ஆக அவர் இன்னும் உன்னை பிளாக் பண்ணாமதான் வச்சிருக்கார்’என்று அபாயகரமான செய்தியை கமெண்டாகப் போட்டிருக்கிறார்.

சரிதான். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளுக்கே எதிராளிகளை உடனுக்குடன் பிளாக் பண்ணிவிடும் சமூகச் சூழலில் வைரமுத்து இவ்வளவு மூர்க்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னும் சின்மயியை பிளாக் பண்ணாமல் தன்னைத் தொடர அனுமதித்துக்கொண்டிருப்பது எதனால்?